சமீபத்திய பதிவுகள்

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 28
முகம்மது கஜ்னியின் வருடாந்திர ஜிகாதிய தாக்குதலினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது வடமேற்கு பாரதம். அவனின் கொடூர தாக்குதலினால் பல்வேறு இந்து சமூகங்கள் நிலைக் குலைந்தன. சிந்து பகுதியை சேர்ந்த "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் கட்டாய மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர். ஆனால் முஹம்மது கஜ்னியின் அழிவு பயனம் அதோடு நிற்பதாக தெரியவில்லை. அவனின் அடுத்த இலக்காக ரிக் வேதத்தில் குறிப்பிடப் பட்டதும், 12 ஜோதிர் லிங்கத்தில் ஒன்றானதுமாக சோமநாதர் ஆலயம் இருந்தது.

குஜராத்தின் சௌராஷ்டிர பகுதியில் இருந்த சோமநாதர் ஆலயம் மிக அற்புதமானதாகவும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகவும் புராண காலத்தை சேர்ந்ததாகவும் இருந்த‌து. மிகப்பெரும் கோவிலாக திகழ்ந்த அதன் வளாகத்தில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது.

பொது ஆண்டு 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான "கோக்னா ரானா"வும் அடக்கம். முஹம்மது கஜ்னி சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை தன் கைகளாலேயே உடைத்து அதன் துண்டுகளை தன் கஜ்னி நகரில் இருந்த ஜாமியா மசூதியின் படிகட்டுகளிலும், தன் தர்பாரிலும் நடை பாதைகளில் பதிக்க செய்தான். மீதி இருந்த துண்டுகளை மெக்காவிற்கும் மெதினாவிற்கும் அனுப்பி அங்கு நடை பாதைகளில் பதிந்திட செய்தான்.. அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.

ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.

"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அவன் அழிப்பதனால், பல ஹிந்துக்கள் நம்பிக்கை தளர்ந்திடுவார்கள், அவர்களை முஹம்மதியர்களாய் எளிதாக மாற்றி விடலாம் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே தன் கைப்பட அழித்தான்"